சென்னை தியாகராய நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார். முருகனுக்குத் திருமணமாகி அர்ஜூன் என்ற மகனும், திவ்யா(20) என்ற மகளும் உள்ளனர். மகள் திவ்யா கே.கே. நகரில் உள்ள கார்ப்பரேசன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.
இந்நிலையில் திவ்யா தனது தூரத்து உறவினர் நூபேஸ் என்பவருடன் காதல் வயப்பட்டு இருவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களது காதல் விவகாரம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து திவ்யாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த திவ்யா நேற்று(அக்.04) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.