தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்தூரி சந்தனக்கூடு திருவிழா - 45 கிலோ சந்தனக்கட்டைகள் அரசு தரப்பில் இருந்து வழங்க அரசாணை - Presented by Chief Minister Mughal Stalin

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்குத்தேவையான 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கந்தூரி சந்தனக்கூடு திருவிழா- 45 கிலோ சந்தனக்கட்டைகள் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும்
கந்தூரி சந்தனக்கூடு திருவிழா- 45 கிலோ சந்தனக்கட்டைகள் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும்

By

Published : Nov 2, 2022, 2:55 PM IST

சென்னை: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழா தொடர்பாக இன்று (2.11.2022) தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் எஸ்.செய்யது காமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் எஸ்.செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் திரு.ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு, சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃபு வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர், கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.

இதையும் படிங்க:பிரதமரும் தெலங்கானா முதலமைச்சரும்..? ராகுல் காந்தி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details