பெற்றோர்கள் குறித்தும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பது குறித்தும், வாழ்க்கை குறித்தும் எனப் பல சமூக பிரச்னைகளை எளிதாகப் புரியும் வகையில் வரிகளை உருவாக்கி வெளிவந்ததால் கானா பாடல்கள் வெற்றியடைந்தன.
நாளடைவில் 1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் கானா பாடல்கள் சினிமாவில் தோன்றி பெரும் வரவேற்பைப் பெற்று, அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
கானா பாடல்
இந்நிலையில் சமீபகாலமாக கானா பாடல்களின் ட்ரெண்டை மாற்றி சாண புடிச்ச கத்தி, கொலை கேசு, மிட்டாய் சாங், ரவுடி பாடல் என குற்றச்செயல்களைத் தூண்டும் வகையிலான பெயர்களை வைத்து, கானா பாடலை உருவாக்கி வருகின்றனர்.
இது போன்ற பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால், வெறும் சப்ஸ்கிரைபருக்காக மட்டுமே கானா பாடகர்கள் இதே போன்ற பாடல் வரிகளை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
'மூளைய மயக்கும் டம்மு'
குறிப்பாக 'சாணம் புடுச்ச கத்தி' என்ற கானா பாடலில், கத்தி மூலமாக கொலை செய்யும் காட்சிகளும், 'மூளைய மயக்கும் டம்மு' என்ற பாடலில் கஞ்சா புகைப்பது குறித்தும், மிட்டாய் என்ற கானா பாடலில் போதை மாத்திரைகளை சாப்பிட்டு கத்தியை எடுத்துச்சென்று பணம் பறிப்பது குறித்தான காட்சிகளும், வரிகளும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அடிதடி ரவுடி
மேலும் '75 vs 307' என்ற பாடலில் அடிதடி ரவுடிகளுக்கும், கொலை குற்றம் தொடர்பான ரவுடிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் பாடலாக அது அமைந்துள்ளது.