தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தினகரன், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. ஆனால், அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்களான ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுகவில் தனித்து விடப்படுகிறாரா ரத்தின சபாபதி எம்எல்ஏ? - MLA rathina Sabapathi
சென்னை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுக்கு அதிமுக ஆதரவு கரம் நீட்டியுள்ள நிலையில், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி தனித்து விடப்பட்டாரா என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், கூட்டம் முடிந்த பிறகு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவை விருகம்பாக்கம் எம்எல்ஏ ரவி, தி.நகர் எம்எல்ஏ சத்யா ஆகிய இருவரும் இறுகப்பற்றிக் கொண்டு காரில் அழைத்துச் சென்றனர். ஆனால், அறந்தாங்கி எம்எல்ஏவான ரத்தின சபாபதியை அதிமுகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. தினகரனின் ஆதரவாளரான ரத்தினசபாபதியை விட்டு விட்டு, மற்றொரு அதிருப்தி எம்எல்ஏவான பிரபுவை அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றாக அழைத்துச் சென்றது, அதிமுக தலைமை பிரபுக்கு ஆதரவு கரமும், ரத்தின சபாபதியை தனித்து விடுவது போலவும் தெரியவருகிறது.