சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள கணொலியில், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைகளைப் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் அவரச் சட்டம் கொண்டு வரவேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கி உயிரிழந்த, மருத்துவர்களின் உடல்களைக் கௌரவமான முறையில் அடக்கம் செய்ய முடியவில்லை என்பது அவமானத்திற்குரியது.
அப்படி உயிரிழந்த மருத்துவர்களான சைமன், லெட்சுமி நாராயண ரெட்டி, ஜெயமோகன் ஆகியோரின் உடல்களுக்கு கௌரவமான முறையில் இறுதி சடங்குகள் நடத்த முடியாத அவல நிலை ஏற்பட்டற்கு தமிழ்நாடு அரசே காரணம். மருத்துவர்களை அவர்களது இறப்பிற்குப் பின்பும் அவமானப்படுத்துவது மிகுந்த வேதனையைத் தருகிறது. எனவே மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும். கரோனா தடுப்பு பணியில் அவர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.