தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி பண்டிகை குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை! - தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை கரைப்பது குறித்து இந்து அமைப்புகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார்.

General Secretary advises on Ganesha Chaturthi festival!
General Secretary advises on Ganesha Chaturthi festival!

By

Published : Aug 6, 2020, 3:08 AM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை கரைப்பது குறித்து 17 இந்து அமைப்புகளுடன், தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஆனால் தற்போது கரோனா தொற்று காரணமாக தளர்வுகலுடன் ஊரடங்கு உள்ள நிலையில், பொது இடங்களில் விநாயகர் வைக்க அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details