தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி!

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

General public
சென்னை புறநகர் ரயில்

By

Published : Jun 24, 2021, 1:36 PM IST

சென்னை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க முன்னதாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதுவரை அத்தியாவசியப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே ரயிலில் பயணித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை (ஜூன்.25) முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பயணிக்க அனுமதி

கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் ஆண்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் ஏழு மணி வரையும், காலை 9.30 முதல் மாலை 4.30 வரையும், இரவு ஏழு மணி முதல் இரவு சேவை முடியும் வரையும் ஆண்கள் பயணிக்கலாம். அவர்களுக்கு, ஒற்றை பயண டிக்கெட் மட்டுமே வழங்கப்படுகிறது.

24 மணி நேரமும் பெண்கள் பயணிக்க அனுமதி

பெண்கள் மற்றும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஒற்றை டிக்கெட்கள், மறு மார்க்க டிக்கெட்கள், மாதாந்திர டிக்கெட் ஆகியவை விநியோகிக்கப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், நீதிமன்ற, சுகாதார, மாநகராட்சிப் பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் பணியாளர் சிறப்பு ரயிலில் அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி

இவர்களுக்கு ஒற்றை டிக்கெட்கள், மறு மார்க்க டிக்கெட்கள், மாதாந்திர டிக்கெட் ஆகியவை விநியோகிக்கப்படும்.

மாஸ்க் அபராதம்

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் யாரும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்: அதிரடி பேச்சில் அசரடித்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details