சென்னை:ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாக மருத்துவம் பெற்றுவந்தார். இந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
இந்த நிலையில், அவருக்கு மருத்துவம் அளித்த ஜெம் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலர் மருத்துவர் அசோகன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவியார் விஜயலட்சுமி (66) உடல்நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த பத்து நாள்களாகச் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
உடல் நலமடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீவிர மாரடைப்புக்குள்ளானார்.