சென்னை கரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வரும் சூழலில், கேயம்பேடு சந்தை கரோனா வைரஸ் பரவலின் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு பணிசெய்து விட்டு ஊர்திரும்பிய பல தொழிலாளர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து நேற்று முதல் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டும் என சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் கொள்முதல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 24 கி.மி தூரத்தில் அமைந்துள்ள திருமழிசை, சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். திருமழிசை ஆழ்வார் பிறந்த மண் இது. இங்கு அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாத பெருமாள், ஆழ்வார் திருக்கோயில், பெருமாள் திருக்கோயில் ஆகிய முக்கிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே வெள்ளவேடு, குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.