தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவுக்கு கூஜா தூக்கும் திருமாவளவன்: காயத்ரி ரகுராம் கடும் தாக்கு - திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்

சென்னை: கந்தசஷ்டி கவசம் பிரச்னை குறித்து திருமாவளன் வெளியிட்ட வீடியோவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

By

Published : Jul 22, 2020, 11:08 AM IST

கந்தசஷ்டி கவசம் சர்ச்சை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருவதால், இந்தப் பிரச்னை கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பதிவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "மிஸ்டர் திருமாவளவன் நீங்கள் வேல் குத்தி இருக்கிறீர்களா அல்லது காவடி எடுத்து இருக்கிறீர்களா பெருசா பேச வந்து விட்டீர்கள். நீங்கள் திமுகவுக்கு கூஜா தூக்குகிறீர்கள். மதமாற்றம் செய்ய காசு வாங்குகிறீர்கள். அதற்காக நீங்க சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகுமா.

இந்த பிரச்னைக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுரேந்திரன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துள்ளீர்கள். சுப்பிரமணியம், கந்தன் என்று பிராமணர்கள் பெயர் வைத்துள்ளார்கள். உங்கள் பெயர் முருகரா இல்லை சுப்பிரமணியா. நாங்கள் முருகன் பெயர் தான் வைத்துள்ளோம். தமிழ்நாட்டு கலாசாரத்தையும் கடவுளையும் அசிங்கப்படுத்தி பேசும் நீங்கள் இது குறித்து பேசுவதற்கு அருகதை இல்லை.

இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லை என்றால் இனிமேல் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்று அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details