தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபாச கருத்து - திமுக நிர்வாகி மீது காயத்ரி ரகுராம் புகார் - சென்னை மாவட்ட செய்திகள்

சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை ஆபாச கருத்துடன் பதிவிட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுக நிர்வாகி மீது காயத்ரி ரகுராம் புகார்
திமுக நிர்வாகி மீது காயத்ரி ரகுராம் புகார்

By

Published : Oct 22, 2021, 8:30 PM IST

சென்னை: பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த பொங்கல் பண்டிகையின் போது பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது மாட்டு வண்டியிலிருந்து சறுக்கி கீழே விழுந்த போது, எனது ஆடை சற்று விலகியது. அந்நேரத்தில் ஆபாச நோக்கில் ஒருவர் என்னை புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆபாச கருத்து

அந்த புகைப்படத்தை திமுகவைச் சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் தற்போது ஆபாச கருத்துடன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக நிர்வாகி மீது காயத்ரி ரகுராம் புகார்

காயத்ரி ரகுராம் புகார்

உடனடியாக ஆபாச கருத்துகளுடன் எனது புகைப்படத்தை பதிவிட்ட ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க:மோடியிடம் கோரிக்கை வைத்த நடிகை சுதா சந்திரன்!

ABOUT THE AUTHOR

...view details