கோவிட்-19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்கு சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளருக்கு என்.95 முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு முகக்கவசம் அவசியம்! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், புஷ்பா சத்தியநாராயணா
சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிகின்றனரா என்பதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வின் முன்பு விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளி கரோனா வைரஸ் தொற்றினால் இறந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும் தொழிலாளர்களுக்கு முகக்கவசம் கையுறை, சோப் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்று கியாஸ் விநியோகம் செய்யும் முகவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவர்களுடன் ஏற்கனவே மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க :ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு திட்டம்!