சென்னை: பன்னாட்டுச் சந்தையில், கச்சா எண்ணெய்யின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை, இருமுறையும் மாற்றம்செய்யப்படுகின்றன. வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 900 ரூபாய் தாண்டியது. அதன்பிறகு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டுவருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை 285 ரூபாய்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயுவின் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சிக்கும், அவதிக்கும் ஆளாகியுள்ளனர்.
தற்போது சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. அதன்படி சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிகரித்து 915.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க : நெல்லையில் பலத்த பாதுகாப்பு: 2 ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பி, 2,400 காவலர் குவிப்பு