சென்னை புளியந்தோப்பு கோவிந்தசிங் பகுதியில் சோமசுந்திர பாரதி என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நுண்ணறிவு காவல் துறையினர் புளியந்தோப்பு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற காவலர்கள், அவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர்கள் கோயம்பேட்டைச் சேர்ந்த ராஜசேகர்(33), மதுரையைச் சேர்ந்த பால் பாண்டியன்(30), புளியந்தோப்பைச் சேர்ந்த சோமசுந்தர பாரதி(36) என்பது தெரியவந்தது. ராஜசேகர், பால்பாண்டியன் ஆகியோர் லாரி மூலம் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை மதுரைக்கு கடத்திச் செல்ல முயன்றனர்.