சென்னை சவுக்கார்பேட்டையில் கஞ்சா, புகையிலை மற்றும் போதை சாக்லேட்டுகளை உள்ளிட்ட போதை பொருட்களை வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வந்து சப்ளை செய்து வருவதாக பூக்கடை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய 11ஆவது பிளாட்பார்ம் அருகே சந்தேகத்திற்கிடமாகச் சுற்றி திரிந்த 3 வடமாநிலத்தவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 25 கிராம் கஞ்சா, புகையிலை மற்றும் 200 போதை சாக்லேட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.