சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை அழைத்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
ரயிலில் கஞ்சா கடத்த முயற்சி: இளைஞர் கைது - ganja news in chennai
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்த்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை போலீசார், அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 4.5 கிலோ எடையுள்ள ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 19) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க: ரூ. 7 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது செவிலியர் புகார்!