சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டாதகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் நடத்து கொண்டதாக கூறி யூடியூபரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்ற சாட்டை துரைமுருகன் மீது காவல்துறை நான்கு வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சாட்டை துரை முருகனின் மனைவி மாதரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், அரசியல் காரணங்களுக்காக தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், குண்டர் சட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரிய மனுவை உரிய காலத்திற்குள் பரிசீலிக்கவில்லை. எனவே எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.