சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் சதீஷ். இவர் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சதீஷ் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது திடீரென வழிமறித்த நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
குடி போதையில் அப்பாவி இளைஞனை தாக்கி நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பல் கைது! - குடி போதை
சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் குடி போதையில் இரு தரப்புகளுக்கிடையே ஏற்பட்ட தகறாரில் அப்பாவி இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு நாட்டு வெடிகுண்டு வீசிய சிறார் உட்பட 8 நபர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அப்புன்,பிரசாந்த், விக்கி ,பரகத்துள்ளா மற்றும் ஒரு சிறுவன் உட்பட 8 நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, மது போதையில் பொழிச்சலூர் பகுதியில் ரவுடிசம் செய்வதில் யார் பெரியவர் என்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கஞ்சா போதையில் இருந்ததால், பணியை முடித்து விட்டு சாலையில் அப்பாவியாக நடந்து சென்ற சதீஷ் என்பவரை தாக்கியதாக ஒப்புகொண்டனர்.
இதனையடுத்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக 8 நபர்களையும் அழைத்துச் சென்றனர். இதில் ஒருவரை வயது வரம்பு காரணமாக செங்கல்பட்டு சிறார் பள்ளிக்கு அழைத்து சென்ற போலீசார், மீதமுள்ள 7 வாலிபர்களை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.