தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞரை கத்தியால் தாக்கிய வழிப்பறி கும்பல் - குற்றவாளிகளுக்கு காவல் துறை வலைவீச்சு! - தமிழ் குற்ற செய்திகள்

சென்னை: மயிலாப்பூர் அருகே இளைஞரை கத்தியால் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த பணம், செல்போனை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Gang
Gang

By

Published : Aug 5, 2020, 10:04 AM IST

Updated : Aug 5, 2020, 10:26 AM IST

சென்னை மயிலாப்பூர் நொச்சி நகரைச் சேர்ந்தவர் அஜய் (22). இவர் மயிலாப்பூர் அப்பு தெருவிலுள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இரவு நேரத்தில் அஜய் பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில், சாந்தோம் ஆலயம் பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் வழிமறித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.500 பறித்துவிட்டு, செல்போனையும் கேட்டுள்ளனர். அதனை அஜய் தர மறுத்ததால் கோபமடைந்த, அந்நபர்கள் அஜயை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு, அவரிடமிருந்த செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அஜயை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மயிலாப்பூர் காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

Last Updated : Aug 5, 2020, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details