சென்னை:வில்லிவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியினரைக் கத்தி முனையில் கட்டிப்போட்டு 70 சவரன் தங்க நகை மற்றும் 3.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2வது பிரதான சாலையில் வசித்திருப்பவர் சோழன் (66) இவர் கட்டிட மேஸ்திரி ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு வனஜா என்கிற மனைவியும், இரண்டு மகன் ஒரு மகளும் உள்ளனர். இரண்டு மகன்கள் மற்றும் மகள் மூவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சோழன் அவரது மனைவி வனஜா உடன் வில்லிவாக்கம் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று (செப் 22) இரவு வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு படுக்கை அறைக்குத் தூங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் யாரோ வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர். இதனால் வனஜா வீட்டின் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது கருப்பு முகமூடியை அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
இதையடுத்து மர்மநபர்கள் கத்தியைக் காட்டி சோழன் மற்றும் அவரது மனைவியின் மிரட்டியுள்ளனர்
வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் வனிதா கழுத்தில், காதில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தங்கக் கம்மல் உள்ளிட்ட 70 சவரன் தங்க நகைகளும் வீட்டில் வைத்திருந்த 3.50 லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.