சென்னை விருகம்பாக்கம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் தினமும் இரவு நேரங்களில் கையில் பட்டாக்கத்தியுடன் ஒரு கும்பல் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. தினந்தோறும் அவர்களது அட்டகாசம் தாங்கமுடியாமல் பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், காவலர்களின் ஜீப் சத்தம் கேட்டவுடன் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பியோடி சென்றுள்ளனர். இதேபோல் கடந்த செவ்வாய் கிழமையன்றும் ரவுடி கும்பல் சுமார் அரை மணி நேரமாக, அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.