சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை 200 அடி பைபாஸ் சாலை மேம்பாலத்தில், இருசக்கர வாகனத்தில் என்ற நபரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளது. மேலும், அவரிடம் இருந்த 82 லட்ச ரூபாயை பறித்து சென்றது. அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ், காவல் ஆணையர் ராமசாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர், தாக்கப்பட்ட நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிப்பு முதற்கட்ட விசாரணையில், மாதவரம் பால்பண்ணை அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் விஜயகுமார், தனது நிறுவனத்தின் பணம் ரூ. 82 லட்சத்தை கொண்டு சென்றதாகவும், அதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கொண்டு காவலர்கள் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் போக்குவரத்து மிகுந்த பைபாஸ் சாலையில், ஒருவர் தாக்கப்பட்டுள்ளது, அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு: நண்பனை மாடியிலிருந்து தள்ளிவிட்ட 4 பேர் கைது