சென்னை: சென்னை வில்லிவாக்கம் மூர்த்தி நகரை சேர்ந்தவர், மணிகண்டன்(30). இவருடைய சகோதரர் பிரபாகரன்(27). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் மணிகண்டனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் வீட்டில் வசதி குறைவாக இருந்த காரணத்தினால், நேற்று முன்தினம்(மார்ச்.31) வில்லிவாக்கம் திருமலை நகரில் உள்ள வாடகை வீட்டிற்கு குடியேறினார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில், வீட்டில் உள்ள பொருட்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அவரது தம்பி பிரபாகரனுடன் திருமலை நகரின் உள்ள வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்து, மது அருந்துவதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இருவரும் பணம் தர மறுக்கவே, அந்த கும்பல் மணிகண்டனை கடுமையாக தாக்கி, அருகில் இருந்த செங்கலால் அவர் தலையில் ஓங்கி அடித்தனர். தடுக்க வந்த அவரது தம்பி பிரபாகரனையும் கடுமையாகத் தாக்கினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.