தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்: தமிழ்நாடு அரசு - விநாயகர் சதுர்த்தி

வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்: தமிழ்நாடு அரசு
வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்: தமிழ்நாடு அரசு

By

Published : Aug 20, 2020, 10:58 AM IST

Updated : Aug 20, 2020, 2:29 PM IST

10:46 August 20

சென்னை: பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

எனவே, மாநிலத்தில் கரோனா தொற்றினால் நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கரோனா நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில்  கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர்  வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி 
நெறிமுறைகளையும் பின்பற்றி, கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத்  தடுக்கும் பொருட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு 
ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

Last Updated : Aug 20, 2020, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details