இதுதொடர்பாக அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், “தமிழ்நாட்டில் லாட்டரி, ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை அரசு தடை செய்துள்ளது. ஆனால், தற்போது மொபைல் பிரீமியர் லீக் என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி: கோலி, தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் - அய்யா வைகுண்டர் கட்சி
சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தைக் கண்ட பொதுமக்கள் பலர் இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு, பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் தற்போது ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் பலரும் வீட்டில் முடங்கியுள்ளதால் ஆன்லைன் சூதாட்டம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
இதனால் உடனடியாக மொபைல் பிரீமியர் லீக் என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியை தமிழ்நாட்டில் தடைசெய்ய வேண்டும். இதுமட்டுமில்லாமல் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.