சென்னை: மாநகரம் முழுவதும் மரம் வளர்ப்பு முறையை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குடியிருப்பு நல சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "200க்கும் மேற்பட்ட குடியிருப்பு நல சங்கங்கள் உடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி சாலை போடும்போது மரம் நடுவதற்கு விருப்பப்பட்டால் மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
ஒவ்வொரு குடியிருப்பு நல சங்கங்களும் குறைந்தது ஒரு ஆண்டுக்கு 500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடவேண்டும். 6 அடி உயரத்தில் இருந்தால் அவை பாதுகாப்பாக வளரும் சூழல் இருக்கும். மரங்கள் நடும்போது, உள்ளூரில் உள்ள மரங்களை வைத்தால் புயல் போன்ற பேரிடர்களின்போது பாதுகாப்பாக இருக்கும்.
சென்னை பசுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம், அதற்கு முக்கியமாக மக்களின் பங்கு அதிகம் எங்களுக்கு தேவை. மரம் நடுவது மக்கள் இயக்கம், எனவே குடியிருப்பு நல சங்கங்கள் ஒரு மரத்தை நட்டால் அதை நன்றாக தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.