தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராம் விலாஸ் பஸ்வான் மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேரிழப்பு - ஜி.கே. வாசன் - ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு

சென்னை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு என்பது நாட்டில் உள்ள ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

G k vasan
G k vasan

By

Published : Oct 9, 2020, 12:26 PM IST

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழஎதார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், "லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் அவர் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி பிகார் மாநில மக்களுக்கு மட்டுமல்ல நாட்டிலல் உள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

தன் சிறுவயதிலேயே பொது வாழ்விற்கு வந்து, தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்தவர். இவர் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தனிச்சிறப்பு. பல்வேறு அமைச்சரவையில் பல்வேறு துறையில் அமைச்சராக பதவியை ஏற்று நாட்டின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்.

அவர் ஏற்ற துறையின் மூலம் தமிழ்நாட்டிற்கு பல நன்மைகளை செய்ததை நினைவுகூற விரும்புகிறேன் . 1996ல் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பஸ்வான், ஜி.கே. மூப்பனாருடன் நெருங்கிப்பழகி அன்பு பாராட்டியவர்.

அவரை இழந்து வாடும் அவரது இயக்கத்தினருக்கும், குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும், பிகார் மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details