தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் தொல்லியல் கள ஆய்வுகளுக்கான நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை! - தொல்லியல் துறை

சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்த தொகையை 3 கோடி ரூபாயாக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.

Funding for archeological excavations increased to Rs. 3 crore by the Tamil Nadu Government
தொடர் தொல்லியல் கள ஆய்வுகளுக்கான நிதியை ரூ. 3 கோடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை!

By

Published : Jan 8, 2021, 10:37 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபினை வெளிக்கொணரும் வகையில் தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகளும், அகழாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தொடர் கள ஆய்வு, அகழாய்வுகளைத் தேவைக்கு ஏற்ப பெரிய, சிறிய அளவுகளில் ஒவ்வொரு ஆண்டும் பழங்கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம், வரலாற்று தொடக்கக் காலம், கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சிகள், வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மண்டலங்களிலும் உள்ள தொல்லியல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-2021ஆம் ஆண்டிற்கான கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை சார்பில் தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்டுவரும் நிதி 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடர் தொல்லியல் கள ஆய்வுகளுக்கான நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை!

இந்நிலையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள், அகழாய்வுகள் மேற்கொள்ள ஏதுவாக, ஆண்டுதோறும் தொடரும் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும் ரூ.2 கோடியினை ரூ.3 கோடியாக உயர்த்த தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :முதல்முறையாக தமிழில் அறிவிப்பு: சேலம் விமானிக்கு முதலமைச்சர் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details