சென்னை: கடந்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்த்து ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்து தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.