தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை- திருப்பதி இடையே சிறப்பு ரயில்! - சப்தகிரி சிறப்பு ரயில்

சென்னை: சென்னையிலிருந்து வரும் 19ஆம் தேதி முதல் திருப்பதிக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துளளது.

சென்னை- திருப்பதி இடையே சிறப்பு ரயில்!
சென்னை- திருப்பதி இடையே சிறப்பு ரயில்!

By

Published : Nov 16, 2020, 8:42 PM IST

சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும், 'சப்தகிரி சிறப்பு ரயில்' வரும் 19ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (17/11/2020) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

சென்னை-திருப்பதி, திருப்பதி-சென்னை என இரு முனைகளிலும் தினமும் இந்த ரயில் இயக்கப்படும். நவம்பர் 19ஆம் தேதிமுதல் இயங்கும் இந்த ரயில்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை செயல்படவுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை-திருப்பதி, திருப்பதி-சென்னை என இரு முனைகளிலிருந்தும் தினமும் இரு ரயில்கள் நவம்பர் 19ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.

ரயில் எண் 06057: டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 06.25 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் 09.40 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.

ரயில் எண் 06008: திருப்பதியிலிருந்து 10.15 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் 13.40 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை வந்தடையும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details