தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மேலும், தந்தை, மகன் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் நாளை முழு கடையடைப்பு !
சென்னை: தூத்துக்குடி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 24) முழு கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கூறியதாவது, "கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தந்தை, மகன் உயிரிழப்பு: ஒரு கோடி நிவாரணம் வழங்க கோரிக்கை!