தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் மேலும் ஏழு நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு! - cm palanismay announce

சென்னை: மதுரை மாவட்டத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

cm
cm

By

Published : Jul 4, 2020, 6:40 PM IST

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு, கரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. இதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோரின் விழுக்காடு நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்துவருகிறது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு ஜூன் 24ஆம் தேதியன்று 12 மணி முதல் மணி முதல் ஜூலை 5ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த முழு ஊரடங்கின்போது கரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், நோய்த்தொற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் ஏழு நாள்களுக்கு, ஜூலை 6ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் வருகின்ற 12ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005இன் கீழ் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன்.

ஊரடங்கும், கட்டுப்பாடுகளும்

  • இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
  • கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones), எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
  • முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிசெய்யும்.
  • அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலைத் தடுக்க இயலாது.
  • பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவேண்டும்.

மேலும், பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details