திருப்பத்தூர்:ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியிலுள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து ஆம்பூர் நோக்கி வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையை கடக்க முயன்றபோது லாரியின் பக்கவாட்டில் வேலூரிலிருந்து, வாணியம்பாடி நோக்கி சென்ற கார், லாரி மற்றும் சென்னையிலிருந்து ஓசூர் நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அரசு பேருந்து என அடுத்தடுத்து 3 மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாத நிலையில், வைக்கோல் லாரியின் மீது மோதிய கார் முன்பக்கம் பாதி நொறுங்கியது. மேலும், அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் உடனடியாக இவ்விபத்து குறித்து அறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தைச் சரி செய்தனர்.
புதுக்கோட்டை:புதுக்கோட்டை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சிப்காட் அருகே அதிகாலையில் சென்னையிலிருந்து காரைக்குடியை நோக்கி சென்ற காரும், புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கிச் சென்ற அரசு நகர பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் ஹரிதாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சிறுவர் உள்பட ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை கார் விபத்து ராணிப்பேட்டை:முகத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ஆந்திரா மாநிலம் சங்ககிரியில் இருந்து சென்னைக்கு சிமெண்ட் ஏற்றி வந்த கனரக லாரி எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் தூக்கம் கலக்கம் காரணமாக சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
மேலும், இது சம்பந்தமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர், விபத்தில் காயமடைந்து லாரியில் சிக்கிக் கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை லாரி விபத்து இதையும் படிங்க:முன்னாள் காதலி மீது கல்லைப் போட்டுக் கொலை.. பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்ட நபர்!