தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN Cabinet Expansion: தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்; யார் யாருக்கு என்ன பொறுப்பு? - DMK

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம்!
தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம்!

By

Published : Dec 14, 2022, 11:24 AM IST

Updated : Dec 14, 2022, 11:40 AM IST

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், அமைச்சரின் பெயர், முன்னதாக கொடுக்கப்பட்ட அமைச்சகம், தற்போது கொடுக்கப்பட்டுள்ள அமைச்சகம் மற்றும் ஒதுக்கப்பட்ட இலாகா என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. உதயநிதி ஸ்டாலின் - இளைஞர் நலத்துறை அமைச்சர் - இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்
  2. ஐ.பெரியசாமி- கூட்டுறவுத்துறை அமைச்சர் - ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் - ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்
  3. எஸ்.முத்துசாமி - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் - மாற்றம் செய்யப்படவில்லை - வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்பு திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நகர் பகுதி வளர்ச்சி
  4. கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி அமைச்சர் - கூட்டுறவுத்துறை அமைச்சர் - கூட்டுறவு
  5. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் - மாற்றம் செய்யப்படவில்லை - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், சீர்மரபினர் நலன் மற்றும் கதர் மற்றும் கிராமப்புற தொழில் வாரியம்
  6. க.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர் - சுற்றுலாத்துறை அமைச்சர் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு கழகம்
  7. ஆர்.காந்தி- கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் - மாற்றம் செய்யப்படவில்லை - கைத்தறி மற்றும் துணிநூல், பூதானம் மற்றும் கிராமதானம்
  8. பி.கே.சேகர்பாபு - இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் - மாற்றம் செய்யப்படவில்லை - இந்து சமய மற்றும் அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
  9. டாக்டர்.பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் - மாற்றம் செய்யப்படவில்லை - நிதி, திட்டம், மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் மற்றும் புள்ளியல் துறை
  10. வி.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் அமைச்சர் - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு
  11. எம்.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர் - வனத்துறை அமைச்சர் - வனம்
Last Updated : Dec 14, 2022, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details