சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் தெருவில் வசித்து வந்தவர் தியாகராஜன் (21). பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு செல்போன் கடையில் பணிபுரிந்துவந்தார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பமாக இருந்தாலும், இவரது விருப்பபடி உயர் ரக R15 இரு சக்கர வாகனத்தை ஒரு லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து அவரது தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
சில மாதங்களில் அவரது தந்தை உடல்நிலை பிரச்னை காரணமாக உயிரிழந்தார். இதன்பின் தந்தையின் நினைவாக தனது இருசக்கர வாகனத்தை தியாகராஜன் பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 05 ஆம் தேதி வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவிகளோடு குற்றவாளிகளைத் தேடிவந்தனர். கரோனா பாதிப்பு காரணமாக, வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.