தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்றுமுதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - Guide protocol to open Tasmac

தமிழ்நாட்டில் இன்றுமுதல் (ஜூன் 14) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் ’குடி’மகன்கள்
மகிழ்ச்சி வெள்ளத்தில் ’குடி’மகன்கள்

By

Published : Jun 14, 2021, 7:46 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்து, நோய்த்தொற்றுப் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களைத் தவிர பிற அனைத்து மாவட்டங்களிலும் இன்றுமுதல் (ஜூன் 14) டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதில், "டாஸ்மாக் மதுக் கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கரோனா முன்னெச்சரிகை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

மதுக்கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆறு அடி தனிநபர் இடைவெளி இருக்க வேண்டும். சில்லறை விற்பனை மதுக்கடைகளைச் சுற்றிலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் திறப்பால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுப்பிரியர்கள்

சில்லறை விற்பனை மதுக்கடைகள் திறக்கப்படும்போது உள்புறமும், வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக, மது வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் மது வாங்கவரும் நபர்களுக்கு கட்டாயம் மது பாட்டில்கள் வழங்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் முடிதிருத்தகங்கள், டாஸ்மாக் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'சம்மர் வந்துட்டா இப்படித்தான் இருக்கணும்' - சன்னியின் நச் பிக்!

ABOUT THE AUTHOR

...view details