தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 20 கோடி ரூபாய் வருவாய்! - #ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய 5.42 லட்சம் பேர் மூலமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு 20 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

tn govt

By

Published : Sep 9, 2019, 3:09 PM IST

கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் 2 ஆகியவை நடைபெற்றன. இத்தேர்வை ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 51 பேர் எழுதினர்.

இதற்கான தேர்வு கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 250 ரூபாயும், மற்ற பிரிவினர் 500 ரூபாயும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு செலுத்தினர்.

இந்த தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் முதல் தாள் தேர்வில் 0.33 விழுக்காட்டினரும், இரண்டாம் தாள் தேர்வில், 0.83 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றனர். இரண்டு தாள்களும் சேர்த்து 1.16 சதவீதம் பேர், அதாவது 967 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

தேர்வு முடிவுகள் இப்படி கடும் வீழ்ச்சியாக அமைந்தாலும், தேர்வு எழுதியவர்கள் செலுத்திய தேர்வு கட்டணம் வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details