தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் பார்வை: உளவுத்துறை முதல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி வரை...

ஆட்சி மாற்றத்தை அடுத்து காவல் துறையில் உடனடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. இன்னொரு பகுதியாக 3 முக்கிய ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

3 ஐபிஎஸ் அலுவலர்கள் பணிஇட மாற்றம்
ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

By

Published : May 8, 2021, 7:16 AM IST

Updated : May 8, 2021, 7:48 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் நேற்று (மே.7) இரவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

உளவுத்துறை ஏடிஜிபியாக கோவை மாநகர காவல்துறை ஆணையராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே மதுரை காவல் ஆணையராக பணியாற்றியவர்.

3 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம்

மேலும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று மாலை (மே.7) தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை செயலராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித் தாள் கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Last Updated : May 8, 2021, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details