இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, 2020-2021ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு - முதலமைச்சர்
சென்னை: வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
![வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10167438-364-10167438-1610105370062.jpg)
எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து ஜனவரி 11ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
மேலும் விவசாயகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என, அதில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.