தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரண்ட்ஷிப் ஸ்னீக் பீக் வெளியானது! - friendship movie review

ஹர்பஜன் சிங் நடித்துள்ள ’பிரண்ட்ஷிப்’ படத்தின் ஸ்னீக்பீக் தற்போது வெளியாகியுள்ளது.

பிரண்ட்ஷிப் ஸ்னீக் பீக் வெளியானது!
பிரண்ட்ஷிப் ஸ்னீக் பீக் வெளியானது!

By

Published : Sep 13, 2021, 7:39 PM IST

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ள திரைப்படம் 'பிரண்ட்ஷிப்'.

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழ்ப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்தப் படத்தை பி.ஸ்டாலின், ஜேபிஆர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஜான் பால் ராஜ், சாம் சூர்யா ஆகியோர் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் இரண்டு நிமிட ஸ்னீக்பீக் இன்று (செப்.13) வெளியிடப்பட்டது. இதனை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டார். அதற்கு நன்றி தெரிவித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில் ”சாலமன் பாப்பையா ஐயா, ”குடும்பங்கள் ஒற்றுமையா இருக்கக் காரணம் ஆண்களா? பெண்களா? ”அப்பிடின்னு பட்டிமன்றம் நடத்துனா, ’இயக்குநர் பாண்டிராஜா’ அப்பிடின்னு இன்னுமொரு ஆப்ஷன் குடுக்கணும். அந்த அளவுக்கு உறவுகளோட அருமை பெருமை எடுத்துகாட்டற பாண்டிராஜுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் ட்விட்

இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பாண்டிராஜ் ”உங்களுக்கும் ...உங்கள் தமிழ் வாத்தியாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்கய்யா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாண்டியராஜன் ட்விட்

வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ’பிரண்ட்ஷிப்’ படம் வெளியாகிறது.

இதையும் படிங்க:குழந்தைகளை பயமுறுத்த வரும் ’டாடி’ ஜான் விஜய்!

ABOUT THE AUTHOR

...view details