சமீப காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலை ஏற்றம் கண்டுவருகிறது. சமையல் எரிவாயு சமீபத்தில் ரூ.50 உயர்ந்து 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால், ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும் சில நாள்களில் 100 ரூபாய் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சாதாரண மக்கள் வேதனை
இதேபோன்று சின்ன வெங்காயம், சமையல் எரிவாயு விலையும் முன்னெப்போதும் இல்லாத நிலையில் விலை உயர்ந்து காணப்படுகிறது. கரோனா காலத்திலும் விலை குறையாமல், நாளுக்கு நாள் உயரும் கடும் விலை ஏற்றம் சாதாரண மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மதுரவாயலில் நடந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் அளித்த பரிசு பெரும் வியப்பை ஏற்படுத்தியதோடு, நிகழ்கால உண்மை நிலவரத்தையும் எடுத்தியம்புகிறது.