சென்னை:டாஸ்மாக் மதுபானக்கடை அருகில் தின்பன்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலிப்பாட்டில்களை சேகரிப்பது, பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.
தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிப்பாணைக்குத் தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுக்களில், ஏற்கெனவே பார் உரிமம் பெற்றுள்ள தனக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் இடையில் அந்த இடத்திற்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க தங்களை நிர்ப்பந்திக்க முடியாது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.