சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர், என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாகவும், உடலில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதாலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சளி மற்றும் உடலில் ஆக்சிஜன் குறைவு காரணமாக தான் அவருக்கு உடல்நிலை பாதிக்கபட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த தோழர் சங்கரய்யாவின் உடல்நலத்தில் சற்று முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்றைய தினமே சங்கரய்யாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்னண் மற்றும் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்னண் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.