சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 342 அரசு இ-சேவை மையங்களில் வாக்காளர் அட்டையை இலவசமாக வழங்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அனைத்து புதிய, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்திடும் விதமாக அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.