மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று (ஜூன்.03) ஆறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மகளிர் நலன் கருதி திமுக அரசு பொறுப்பேற்ற அன்றே, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்துமுதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.