தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இன்று முதல் இலவச பயணச்சீட்டு - பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு பயணசீட்டு

அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இன்று முதல் இலவச பயணசீட்டு வழக்கப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு இன்று முதல் பயணசீட்டு
பெண்களுக்கு இன்று முதல் பயணசீட்டு

By

Published : Jul 12, 2021, 6:30 AM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் மே 7ஆம் தேதியன்று பதவியேற்றார். அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.

இதையடுத்து, மே 8ஆம் தேதியிலிருந்து வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள், திருநங்கைகள் ஆகியோர் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இன்று முதல் இலவச பயணசீட்டு வழக்கப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் எந்தெந்த வழிதடங்களில், எந்தெந்த பிரிவுகளில், எத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறிய இந்த இலவச பயண சீட்டு வழங்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நடுவழியில் கழன்று ஓடிய பேருந்து டயர்... சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details