தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச இரு சக்கர வாகன ஆக்சிஜன் சேவை தொடங்கி வைப்பு! - free oxygen vehicle services opened for people at chennai

சென்னை: தண்டையார்பேட்டையில் இலவச இருசக்கர ஆக்சிஜன் சேவையை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்.

இலவச இருச்சக்கர ஆக்ஸிஜன் வாகன சேவை
இலவச இருச்சக்கர ஆக்ஸிஜன் வாகன சேவை

By

Published : May 30, 2021, 8:08 AM IST

சென்னை தண்டையார்பேட்டையில் கடமை, கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, இலவச ஆக்சிஜன் ஆட்டோ சேவை வழங்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய நேரத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. இதனை விரிவுபடுத்தும் விதமாக, இருசக்கர வாகனங்களில் ஆக்சிஜனை பொருத்தி வீடுகளுக்குச் சென்று மருத்துவர்களின் அறிவுரைகளோடு சோதனை செய்து ஆக்சிஜன் வழங்கும் சேவையை அறக்கட்டளையினர் தொடங்கினர்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வட சென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, ஆர்கே நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு, இலவச இருசக்கர ஆக்சிஜன் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

நேற்று (மே. 29) முதல் பத்து இருச்சக்கர வாகன ஆக்சிஜன் சேவைகள், நான்கு இலவச ஆக்சிஜன் ஆட்டோ சேவைகள், ஒரு இலவச ஆக்சிஜன் டெம்போ சேவையும் தொடர்வதாக, அறக்கட்டளையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:பாலியல் புகார்: பயிற்சியாளர் நாகராஜன் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details