தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கித் தேர்வுகளுக்கு இலவச இணைய பயிற்சி - ஐபிபிஎஸ்

வங்கித் துறைப் போட்டித் தேர்வுகளுக்கு கிண்டி தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பாக இணைய வழியில் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Free online coaching classes for banking exams
Free online coaching classes for banking exams

By

Published : Oct 15, 2020, 1:50 PM IST

சென்னை:கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பில் கிளார்க் பணிக்கு இரண்டாயிரத்து 557 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்பவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (அக். 19) முதல் இணையவழியில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இந்த வகுப்புகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details