தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இலவச நீட் கோச்சிங்! - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Free Need Coaching from November 1st!
Free Need Coaching from November 1st!

By

Published : Oct 20, 2020, 2:16 PM IST

இதுதொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,” பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்ட பயிற்சியினால் 2020 நீட் தேர்வில் ஆயிரத்து 633 மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து தகுதி பெற்றுள்ளனர்.

எனவே இ பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் 2021ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரிலிருந்து இ பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. 2021ஆம் ஆண்டிற்கான பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் விவரத்தினை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட உள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details