இதனையடுத்து, சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட வழித்தடத்தில் உள்ள 32 வழித்தடங்களிலும் பயணிகள் இன்று இரவு வரை கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம்.
தற்போது முதலாம் கட்ட வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வருகை, பயன்பாடு குறித்த சோதனை முயற்சியாக இன்று ஒருநாள் இலவசமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மெட்ரோ ரயில்களின் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் புதிய சலுகையாக சென்னை மெட்ரோவில் ஒருநாள் இலவசமாக பயணிக்கலாம் என்பது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னைவாசிகளுக்கு தித்திக்கும் செய்தி! மெட்ரோவில் இன்று ஃப்ரீ... - service
சென்னை: மெட்ரோவில் இன்று இரவு வரை பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்
இதற்கு முன்னர் தேனாம்பேட்டை, சின்னமலை உள்ளிட்ட வழித்தடங்களில் இலவசமாக இயக்கப்பட்டபோது இரண்டு லட்சம் மக்கள் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.